Saturday, 19 September 2015

சளிக்கு உடனடி இயற்கை மருத்துவம்!

இந்த முறையை நீங்களும் ஒரு முறை செய்து தான் பாருங்கள். 

நீங்கள் இரவு உறங்க செல்லும் முன்னர் மூன்று எலுமிச்சை பழம் ( தேசிக்காய் ) எடுத்து அதை பாதியாக வெட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் இரண்டு கப் அளவு தண்ணீர் ஊற்றி அதனில் தேவையான அளவு உப்பு இட்டு பின்னர் நன்கு கொதிக்க வையுங்கள். நீங்கள் கொதிக்க வைத்த இரண்டு கப் நீர் ஒரு கப் அளவு குறையும் வரை நன்கு வெந்து விடும் அளவுக்கு, அப்பொழுது எலுமிச்சை பழம் ( தேசிக்காய் ) யை புளிந்து அந்த நீரை ஒரு கப்பில் எடுத்து சிறிதளவு சீனி சேர்த்துக் கொள்ளுங்கள் ஓரளவு சூட்டுடன் இரவு தூங்க செல்லும் அரை மணி நேரத்துக்கு முன்பு குடிக்க வேண்டும்.

அப்படி குடித்து விட்டு தூங்குங்கள் உங்களுக்கு உறக்கம் சென்ற பாதி இரவில் உங்களுக்கு வியர்த்து வேர்வையாக வரும் உங்கள் உடம்பில் உள்ள சளி வெளியேறிவிடும். 

ஒரு முறை செய்து தான் பாருங்கள் உங்களுக்கு மருத்துவர்களிடம் செல்ல தேவையே இல்லை. 

இந்த பதிவை படித்துவிட்டு நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள் அவர்களும் பயன் பெறலாம்.

குளத்தில் காசுகளை போடுவதை ஏன்?பொதுவாக, குளங்களிலும் நீர்நிலைகளிலுல் நாம் காசுகளைப் (நாணயங்களை) போடுவோம். இப்பழக்கம் தொன்று தொட்டே நம்மிடம் இருக்கிறது. இதற்கான காரணம் என்னவென்று கேட்டால், அவ்வாறு செய்வதால் ஆகூழ் (அதிர்ஷ்டம்) வந்து சேரும் என்று கூறுவார்கள்.

உண்மையில் இதன் பின்னால் ஓர் அறிவியல் கூறு மறைந்திருக்கிறது. இப்பொழுது, துருப்பிடிக்கா எஃகால் செய்யப்படும் காசுகள் போல் அல்லாமல், முற்காலத்தில் காசுகள் செம்புகளால் தான் செய்யப்பட்டன. செம்பு நம் உடலுக்கு மிகவும் அவசியமான ஒரு கனிமம் ஆகும். செம்பு தாது குறைபாடால் மூட்டுவலி, மாரடைப்பு என்று பல கோளாறுகள் ஏற்படும். எனவே, நம் முன்னோர்கள் செம்பு காசுகளை குளங்களில் போட்டனர். செம்புக் காசுகளில் இருக்கும் செம்பு அணுக்கள் நீருடன் கலக்கும், அதைக் குடிக்கும் மக்கள் உடலுக்கும் செம்பு தாது சேரும். முற்காலத்தில் குளத்து நீர்தான் ஊர்மக்கள் எல்லாருக்கும் குடிநீராகப் பயன்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதே பழக்கம் நாளடைவில் பொருளிழந்து தற்பொழுது நாமும் துருப்பிடிக்கா எஃகால் ஆன காசுகளைக் குளங்களில் போடுகிறோம். பின்னர், கனிமநீரை (mineral water) வாங்கி அருந்துகிறோம். செம்பு குடங்களில் நீரைப் வைத்து அருந்துவது சிறப்பு. செம்பு நீர், புற்றுநோயைத் தவிர்க்கும் பண்புடையதாக அறிவியல் உலகம் கூறுகிறது.

Thursday, 17 September 2015

இயற்கை மருத்துவம் :-

1) என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர் 🍈
""நெல்லிக்கனி.""

2) இதயத்தை வலுப்படுத்த🌺
""செம்பருத்திப் பூ"".

3) மூட்டு வலியை போக்கும் 🌿
""முடக்கத்தான் கீரை.""

4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும்
🍃""கற்பூரவல்லி"" (ஓமவல்லி).

5) நீரழிவு நோய் குணமாக்கும்
🌿""அரைக்கீரை.""

6) வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும்
🌿""மணத்தக்காளிகீரை"".

7) உடலை பொன்னிறமாக மாற்றும்
🍂""பொன்னாங்கண்ணி கீரை.""

8) மாரடைப்பு நீங்கும்
🍊""மாதுளம் பழம்.""

9) ரத்தத்தை சுத்தமாகும்
🌱""அருகம்புல்.""

10) கான்சர் நோயை குணமாக்கும்
🍈"" சீதா பழம்.""

11) மூளை வலிமைக்கு ஓர்
""பப்பாளி பழம்.""

12) நீரிழிவு நோயை குணமாக்கும்
"" முள்ளங்கி.""

13) வாயு தொல்லையிலிருந்து விடுபட
🌿""வெந்தயக் கீரை.""

14) நீரிழிவு நோயை குணமாக்க
🍈"" வில்வம்.""

15) ரத்த அழுத்தத்தை குணமாக்கும்
🌿""துளசி.""

16) மார்பு சளி நீங்கும்
""சுண்டைக்காய்.""

17) சளி, ஆஸ்துமாவுக்கு
🌿""ஆடாதொடை.""

18) ஞாபகசக்தியை கொடுக்கும்
🌿""வல்லாரை கீரை.""

19) ரத்த அழுத்தத்தை குணமாக்கும்
🌿""பசலைக்கீரை.""

20) ரத்த சோகையை நீக்கும்
🍒"" பீட்ரூட்.""

21) ஜீரண சக்தியை அதிகப்படுத்தும் அன்னாசி பழம்.22) முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை
🌾(முள் முருங்கை)

23) கேரட் + மல்லிகீரை + தேங்காய் ஜூஸ் 🌿🍪 கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது.

24) மார்புசளி, இருமலை குணமாக்கும் தூதுவளை.25) முகம் அழகுபெற திராட்சை பழம்.26) அஜீரணத்தை போக்கும் புதினா.27) மஞ்சள் காமாலை விரட்டும் கீழாநெல்லி.28) சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும்
“வாழைத்தண்டு”.
பகிர்ந்துகொள்ளுங்கள்
கண்டிப்பாக மற்றவரும் அறிந்துகொள்ளட்டும்..

Wednesday, 16 September 2015

சிறுநீரக கோளாறு – ஏன் ஏற்படுகிறது ? - எப்படி தடுப்பது ?
சிறுநீரக கோளாறு நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு தூங்குகின்றவரா, அப்படியானால் உங்களுக்கு சிறுநீரக செயலிழப்பு(KIDNEY FAILURE), மூட்டுக்களில் வலி (RHEUMATOID ARTHRITIS) (கழுத்து, முழங்கை, முன்கை மணிக்கட்டு, கீழ்முதுகு வலி, முதுகுத் தண்டுவட எலும்பில் வலி,முழங்கால் மூட்டு வலி,கணுக்கால் எலும்பில் வலி,குதிங்கால் வலி ), சிறு நீரகக் கல், இவை எல்லாம் உண்டாக வாய்ப்புள்ளது. இதை வாத நோய்கள் என்பார்கள்.

பழந்தமிழர் வாழ்வியலின்படி , ஒரு பெரியவர் சன்னலை மூடித் தூங்கினால் காற்று தீட்டுப்பட்டுவிடும் என்று கூறினார். நான் அப்போது இது என்ன கூத்து காற்றுக்கும் தீட்டா என்று எண்ணினேன்.அதை விளக்கிக் கூறவும் கேட்டேன்.அவரால் விளக்க முடியவில்லை.ஆனால் அக்கு பஞ்சர் விஞ்ஞானம் இதற்கு விளக்கம் அளித்தது.

அக்கு பஞ்சரில் சிறுநீரகத்தை இரண்டாவது நுரையீரல் என்பார்கள்.ஒரு நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு ஒருவர் மட்டுமே தூங்கினாலே 3அல்லது 31/2 மணி நேரத்திற்குள்ளாக அறைக்குள்ளே உள்ள காற்றில் உள்ள பிராண வாயுவின்,(ஆக்ஸிஜன்,OXYGEN,02) அளவு குறைந்துவிடும். இதையே அந்தப் பெரியவர் தீட்டு என்கிறார்.

பொதுவாக காற்றில் பிராண வாயுவின் அளவு 21% இருக்கும்.ஆனால் பூட்டிய அறையில் ஒருவர் தூங்கும்போது மூச்சின் அளவு அதிகரிக்கும் வேகத்தாலும்(முன்பே சரநூலில் கூறியிருக்கிறேன் சாதாரணமாக உட்கார்ந்திருக்கும் போது 15 மூச்சும்,தூங்கும்போது 64 மூச்சும்) அறையில் உள்ள காற்றில் பிராண வாயுவின் அளவு குறைந்து   10% சதவிகிதத்துக்கும் கீழே வந்துவிடும்.

அப்போது நுரையீரலால் இரத்தத்தில் பிராண வாயுவின் அளவை சரியாக வைக்க முடியாத போது,உடலில் உயிர் காப்பாற்றப்பட பிராண வாயுவின் தேவை அதிகரிக்க அதிகரிக்க,சிறுநீரகம் அந்த அத்தியாவசியமான வேலையை செய்ய முற்படுகிறது. அது நம் உடலில் தண்ணீரில் உள்ள ஆக்ஸிஜனை எடுத்து உடலுக்கு கொடுக்கும் வேலையை செய்கிறது.(தண்ணீரில் இரு பங்கு ஆக்ஸிஜனும் ஒரு பங்கு ஹைட்ரஜனும் உள்ளது,இது போக நீரில் ஆக்ஸிஜனும் கரைந்து உள்ளது).எனவேதான் சிறுநீரகம் இரண்டாவது நுரையீரல் என்றழைக்கப்படுகிறது.

சிறுநீரகம் மேற்கண்ட வேலையை செய்ய ஆரம்பித்தவுடன் அதுவரை அது செய்து கொண்டிருக்கும் வேலையான இரத்தத்தை வடிகட்டி சுத்தப்படுத்தும் வேலை நிறுத்தப்படுகிறது.நம் உடலில் உள்ள தண்ணீரில் ஆக்ஸிஜன் அளவு குறைந்தவுடன் அந்த கழிவு நீர் வெளியேற நமக்கு சிறுநீர் கழிக்கும் உணர்வு 
தூண்டப்படுகிறது.மீண்டும் புதிய ஆக்ஸிஜன் நிறைந்த தண்ணீர் தேவைப்படுவதால் தண்ணீர் தாகமும் தூண்டப்படுகிறது.இதனாலேயே சிறுநீரகம் அதீதமான வேலைப் பழுவுடன் தள்ளாடுகிறது.

இதனால் சிறுநீரகத்தில் அழுக்குகள், தேங்குவதோடு, இரத்தத்தில் யூரிக் அமிலம் முதலான அழுக்குகள் அதிகரிக்கின்றது,மூட்டுகளில் மூட்டுகளில் யூரிக் அமிலம் படிவங்களாக படிகின்றன.

விளைவு யூரிக் அமிலம் படிவுகளாக சிறுநீரகத்தில் படிந்து கற்களாக மாறுகிறது.இரத்தத்தில் யூரிக் அமிலத்தால் இரத்தம் அழுக்கடைந்து இரத்தத்தின் தடிமம் அதிகரித்து இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் இதயம் அதிக வேலைப் பழுவுக்கு ஆளாகிறது.

மூட்டுகள் யூரிக் அமிலப் படிவங்களால் அரிக்கப்படுகின்றன. இதனால் மூட்டுக்களில் வலி உண்டாகின்றது. இதனாலேயே A/C அறையில் தூங்கும் போது அதிக தண்ணீர் தாகம் எடுக்கிறது. மூட்டுக்களில் வலி வருகி
இவ்வளவு பிரச்சினைகளையும் உண்டாக்கும் காற்றோட்டமில்லாத அறையில் தூங்காதீர்கள். ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படையான இது போன்ற விடயங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Monday, 14 September 2015

பாலைவனமாகும் காவிரி டெல்டா


மீத்தேன் ஆவணப்படத்தை பார்க்க இயலாத தோழர்கள் இதை படித்துவிட்டு  பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

4000 ஆண்டுகள் பழமையானதும் , சுமார் 22,000 கிலோமீட்டருக்கான வாய்க்கால்களை கொண்டதும் 44,000 சதுர கிலோமீட்டருக்கு பரந்து விரிந்து கிடக்கும் காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை , திருவாரூர் , நாகப்பட்டினம் பகுதிகள் தான் ஆசியாவிலேயே மிகத் தொன்மையான உணவு சமவெளி ஆகும். இந்த பகுதி தான் தமிழகத்தில் உற்பத்தியை தன்னிறைவு அடைய செய்கிறது.

இத்தகைய பழமையானதும் தமிழகம் முழுமைக்கும் உணவை கொடுக்கும் பகுதியுமான காவிரி டெல்டாவை இயற்கை எரிவாயுவான மீத்தேன் எடுக்க போகிறோம் எனக்கூறி அழிக்க அனுமதி கொடுத்திருக்கிறது இந்திய அரசு.

காவிரி டெல்டாவில் பூமிக்கு அடியிலிருக்கும் நிலக்கரி படிமத்தில் படிந்திருக்கும் மீத்தேன் வாயுவை எடுக்க தண்ணீர் , மணல் இவைகளுடன் 600 க்கும் அதிகமான இராசயன பொருட்கள் கலந்து 6000 அடிக்குக் கீழே துளையிட்டு அதில் இந்த கலவை அனுப்பி பாறையை வெடிக்க வைத்து மீத்தேன் எரிவாயுவை எடுப்பார்கள்.

இத்திட்டத்தின் மூலம் ஒரு கிணற்றில் ஒரு தடவை மீத்தேன் வாயு எடுக்க மட்டும் 5 கோடியே 66 இலட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. சுமார் 2000 கிணறுகள் தோண்டப்பட போவதாக சொல்கிறார்கள். அப்படியென்றால் 4 TMC தண்ணீர் எடுக்க போகிறார்கள் . 4 TMC தண்ணீரை கொண்டு 40 இலட்சம் பேருக்கு ஒரு நாளைக்கு 100 லிட்டர் வீதம் வருடம் முழுவதும் கொடுக்கலாம்.

அதே போல ஒரு முறை மீத்தேன் எடுக்க ஒரு கிணற்றுக்கு 400 லாரிகள் மணல் தேவை. மொத்தம் 2000 கிணறுகள் என்றால் 8 இலட்சம் லாரி மணல் ஒரு முறை எடுக்க தேவைப்படும். அதாவது 80,000 வீடுகள் கட்ட ஆகும் மணலை இது விழுங்கும்.

இது போல 40 அல்லது 50 ஆண்டுகள் தண்ணீரையும் மணலையும் தொடர்ந்து எடுத்தால் காவிரி டெல்டாவும் நம் வருங்கால தலைமுறையும் என்னவாகும். பிழைப்பு தேடி டெல்டா பகுதிகளில் வாழும் மக்கள் சுமார் ஒரு கோடி பேர் உள்நாட்டில் அகதிகளாக மாற வேண்டுமா ? சோற்றுக்கு பதிலாக நாம் என்ன அவர்கள் கொடுக்கும் எலும்புத்துண்டு பணத்தையா உண்ண முடியும் ?

மீத்தேன் எரிவாயு எடுப்பதன் மூலம் வெளியேறும் கதிரியக்கம் கலந்த வேதிப்பொருட்களை இவர்கள் நம் வயல்வெளிகளில் தான் கொட்டப் போகிறார்கள். ஆகையால் இந்நிலங்கள் விவசாயம் செய்ய முடியாதவையாக மாறுவதோடு அப்பகுதியில் வாழும் விவசாயிகள் மற்றும் கால்நடைகளின் உடலுக்கும் உயிருக்கும் ஆபத்தாகவே இருக்கும். மொத்தத்தில் காவிரி டெல்டாவை முற்று முழுதாக அழிக்கத் தான் இத்திட்டம் பயன்படும்.

நம்மாழ்வார் சொல்லுவார் 'தமிழ்நாட்டுல மூணுல ஒருத்தரு குடிக்கிறது காவிரி ஆற்றுத் தண்ணீர் , வீராணம் ஏரியிலிருந்து தான் சென்னைக்கு தண்ணீர் வருகிறது. வீராணத்துக்கு காவிரில இருந்து தான் தண்ணீர் கிடைக்கிறது. ஆகையால் காவிரிய காப்பத்தறது நம் அனைவரோட கடமை'


ஒட்டுமொத்த தமிழரும் மார்வாடி- பெருவணிக கும்பல்களின் இலாப வேட்டைக்காக பலியிடப்பட இருக்கும் , தமிழர் நாகரீகத்தின் தொட்டிலாக இருக்கும் தஞ்சை டெல்டாவினைக் காக்க களம் காணுவோம்.

Saturday, 12 September 2015

மனித உடலின் நேர மேலாண்மை


நமது உடல், ஒவ்வொரு உடல் பாகத்திற்கென தனித்தனியே கடிகாரத்தின் அலாரத்தை முன்பதிவு செய்து கொண்டு சுழன்று கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு உறுப்புக்கும் அதன் பணியை செய்து முடிக்க இரண்டு மணி நேரம் ஒதுக்கியுள்ளது. இரண்டு மணி நேரம் முடிந்ததும் மீண்டும் அலாரத்தை அடுத்த உறுப்புக்கு மாற்றி விடுகிறது.

விடியற்காலை 3.00 மணிமுதல் 5.00 மணிவரை நுரையீரலின் நேரம்.
இந்த நேரத்தில் சுவாசப் பயிற்சி செய்து காற்றின் மூலம் வரும் பிராண சக்தியை உடலுக்குள் அதிகமாகச் சேகரித்தால் ஆயுள் நீடிக்கும். தியானம் செய்யவும் ஏற்ற நேரம் இது. ஆஸ்துமா நோயாளிகள் இந்த நேரத்தில் மிகவும் சிரமப்படுவார்கள்.

விடியற்காலை 5.00 மணிமுதல் 7.00 மணிவரை பெருங்குடலின் நேரம்.
காலைக்கடன்களை இந்த நேரத்துக்குள் முடித்தே தீர வேண்டும் மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த நேரத்தில் எழுந்து கழிவறைக்குச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் நாளடைவில் மலச்சிக்கல் தீரும்.உயிரணுக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ள நேரமும் கூட இதுவே.

காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை வயிற்றின் நேரம்.
இந்த நேரத்தில் கல்லைத் தின்றாலும் வயிறு அரைத்து விடும். காலை உணவை பேரரசன் போல் உண்ண வேண்டும் என்று சொல்வார்கள். இந்த நேரத்தில் சாப்பிடுவதுதான் நன்கு செரிமானமாகி உடலில் ஒட்டும்.

காலை 9.00 மணிமுதல் 11.00 மணி வரை மண்ணீரலின் நேரம்.
காலையில் உண்டஉணவை மண்ணீரல் செரித்து ஊட்டச் சத்தாகவும் ரத்தமாகவும் மாற்றுகிற நேரம் இது. இந்த நேரத்தில் பச்சைத் தண்ணீர் கூடக் குடிக்கக்கூடாது. மண்ணீரலின் செரிமான சக்தி பாதிக்கப்படும்.
நீரழிவு நோயாளிகளுக்கு மோசமான நேரம் இது.

முற்பகல் 11.00 மணிமுதல் பிற்பகல் 1.00 மணி வரை இதயத்தின் நேரம்.
இந்தநேரத்தில் அதிகமாகப் பேசுதல், அதிகமாகக் கோபப்படுதல், அதிகமாகப் படபடத்தல் கூடாது.

பிற்பகல் 1.00 மணிமுதல் 3.00 மணி வரை சிறு குடலின் நேரம்.
இந்த நேரத்தில் மிதமாக மதிய உணவை உட்கொண்டு சற்றே ஓய்வெடுப்பது நல்லது.

பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை சிறுநீர்ப்பையின் நேரம். நீர்க்கழிவுகளை வெளியேற்ற சிறந்த நேரம்.

மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை சிறுநீரகங்களின் நேரம். பகல் நேரபரபரப்பிலிருந்து விடுபட்டு அமைதி பெற, எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க,தியானம்செய்ய, வழிபாடுகள் செய்ய சிறந்த நேரம்.

இரவு 7.00 மணி முதல் 9.00 மணி வரை, பெரிகார்டியத்தின் நேரம்.
பெரிகார்டியம்என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு இதயத்தின் Shock absorber. இரவு உணவுக்கு உகந்த நேரம் இது.

இரவு 9.00 மணி முதல் 11.00 மணி வரை, டிரிப்பிள் கீட்டர் என்பது ஒரு உறுப்பல்ல.
உச்சந்தலை முதல் அடி வயிறு வரை உள்ள மூன்று பகுதிகளை இணைக்கும் பாதை. இந்த நேரத்தில் உறங்கச் செல்வது நல்லது.

இரவு 11.00 மணி முதல் 1.00 மணி வரை பித்தப்பை இயங்கும் நேரம். இந்த நேரத்தில்தூங்காது விழித்திருந்தால் பித்தப்பை இயக்க குறைபாடு ஏற்படும்.

இரவு 1.00 மணி முதல் விடியற்காலை 3.00 மணி வரை கல்லீரலின் நேரம். இந்தநேரத்தில் நீங்கள் உட்காந்திருக்கவோ விழித்திருக்கவோ கூடாது.
கட்டாயம் படுத்திருக்க வேண்டும். உடல் முழுவதும் ஓடும் ரத்தத்தை கல்லீரல் தன்னிடத்தே வரவழைத்து சுத்திகரிக்கும் நேரம் இது. இந்த பணியை நீங்கள் பாதித்தால் மறுநாள் முழுவதும்
சுறுசுறுப்பில்லாமல் அவதிப்படுவீர்கள்.

உடலின் மொழி

தொடுசிகிச்சையாளர் அ.உமர்பாரூக் தன்னுடைய "உடலின் மொழி" என்ற புத்தகத்தில், நம் ஆரோக்கியம் குறித்து நம்மிடம் பேசும் உடலின் மொழியை பற்றி மிகவும் அழகாக கூறியுள்ளார். தூசியை உள்ளே அனுப்ப மறுக்கும் உடலின் எதிர்ப்புக் குரலே தும்மல். திரிந்த பாலை வாந்தியாகவும் பேதியாகவும் வெளியேற்றுவது குழந்தையின் உடலின் மொழி என்று துவங்கும் இப்புத்தகம், எல்லா உடல் உபாதைகளுக்கும் நோய்களுக்கும் மூலகாரணமாக இருப்பது நமது முறையற்ற உணவுப் பழக்கமே என்பதை பற்றியும், நாம் சாப்பிடும் முறை பற்றியும் மிகப்பெரிய புரிதலை நமக்கு வழங்குகிறது.

எப்படி உண்பது?
எப்படி தண்ணீர் குடிப்பது?
நோய் என்றால் என்ன?
உடம்பு தவறு செய்யுமா? என்ற பல கேள்விகளுக்கு பதில்கள் இதில் விளக்கமாக உள்ளது.


இந்த புத்தகத்தை பதிவிறக்கம் செய்ய

http://www.thamizhagam.net/thamizhagam/elibrary/medicine%20ebook/udalin%20mozhi%205th%20final.pdf

Thursday, 10 September 2015

புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடக்கூடாது. ஏன் தெரியுமா?
புரட்டாசி மாதம் வெயிலும் காற்றும் குறைந்து மழை ஆரம்பிக்கும் மாதம்.
ஆனால் பூமி குளிர மழை பெய்யாது. இத்தனை மாதமாக வெயிலால் சூடாகியிருந்த பூமி மழைநீரை ஈர்த்து வெப்பத்தை குறைக்க ஆரம்பிக்கும்.
சூட்டை கிளப்பிவிடும் காலம் என்பார்கள்.

இது வெயில் கால வெப்பத்தை காட்டிலும் கெடுதல் தரக்கூடியது.
இந்த நேரத்தில் அசைவம் சாப்பிடுவது உடல் சூட்டை அதிகப்படுத்தி உடல் நலத்தை குறைக்கும். வயிறு சம்பந்தமான பிரச்சனையை ஏற்படுத்தும்.

அதனால் தான் புரட்டாசி மாதம் அசைவத்தை ஒதுக்கினர் நம் முன்னோர்.
அது மட்டுமன்றி சரிவர பெய்யாத மழை திடீர் வெப்ப மாறுதல் நோய்கிருமிகளை உருவாக்கிவிடும். காய்ச்சல் சளி தொந்தரவு அதிகரிக்கும்.

துளசி இதை கட்டுப்படுத்தும். இதற்காகவே புரட்டாசியில் விரதம் இருந்து (அசைவம் ஒதுக்கி) பெருமாள் கோவிலுக்கு போகும் வழக்கத்தை ஏற்படுத்தினர்.

பலரை சென்றடைய தயவுசெய்து பகிருங்கள் உறவுகளே...

Saturday, 5 September 2015

உறங்கும் முறை பற்றி சித்தர்கள்


உத்தமம் கிழக்கு,
ஓங்குயிர் தெற்கு,
மத்திமம் மேற்கு,
மரணம் வடக்கு.

கிழக்குத் திசையில் தலை வைத்துப் படுப்பதே நல்லது என்கின்றனர் சித்தர்கள்.  ஆனால் நீண்ட ஆயுளைப் பெற தெற்குத் திசையில் தலை வைத்துப் படுப்பது நல்லது.  மேற்கு திசையில் தலை வைத்துப் படுப்பதால் கனவுகள், அதிர்ச்சி போன்றவை உண்டாகும்.

வடக்கு திசையில் ஒருபோதும் தலைவைத்துப் படுக்கக்கூடாது.  இதனை விஞ்ஞான ரீதியாக ஒப்புக்கொண்டுள்ளனர்.  வடதிசையிலிருந்து வரும் காந்த சக்தி நம் தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும் இதனால் மூளை, பாதிக்கப்படுவதுடன் இதயக் கோளாறுகள், நரம்புக் கோளாறுகள் ஏற்படும்.தொடுசிகிச்சையாளர் அ.உமர்பாரூக் தன்னுடைய "உடலின் மொழி" என்ற புத்தகத்தில், நம் ஆரோக்கியம் குறித்து நம்மிடம் பேசும் உடலின் மொழியை பற்றி மிகவும் அழகாக கூறியுள்ளார். தூசியை உள்ளே அனுப்ப மறுக்கும் உடலின் எதிர்ப்புக் குரலே தும்மல். திரிந்த பாலை வாந்தியாகவும் பேதியாகவும் வெளியேற்றுவது குழந்தையின் உடலின் மொழி என்று துவங்கும் இப்புத்தகம், எல்லா உடல் உபாதைகளுக்கும் நோய்களுக்கும் மூலகாரணமாக இருப்பது நமது முறையற்ற உணவுப் பழக்கமே என்பதை பற்றியும், நாம் சாப்பிடும் முறை பற்றியும் மிகப்பெரிய புரிதலை நமக்கு வழங்குகிறது.

எப்படி உண்பது?
எப்படி தண்ணீர் குடிப்பது?
நோய் என்றால் என்ன?
உடம்பு தவறு செய்யுமா? என்ற பல கேள்விகளுக்கு பதில்கள் இதில் விளக்கமாக உள்ளது.