Monday 6 June 2016

புற்றுநோய் வராமல் தடுப்பது எப்படி?

புற்றுநோய் இன்று யாருக்கு, எத்தனை வயதில், எந்த விதத்தில் வருகிறது என்றே தெரியவில்லை, ஆனால் அது வந்துவிட்டால் அந்த நோயைக் குணப்படுத்துவது மிகவும் கஷ்டமாக இருக்கும். அப்படிக் குணப்படுத்தவது என்றால், அதற்குக் கடுமையான பக்க விழைவுகள் கொண்ட மருந்து மாத்திரைகளைக் கொடுத்துத் தான் சிகிச்சை செய்ய முடியும். இருந்தாலும், இப்படி மருந்து மாத்திரை கொடுத்துக் கூட உயிர் பிழைக்கலாம் என்பது நிச்சயம் இல்லை. எனவே, இந்த நோய் வராமல் பாதுகாப்பாக இருப்பது தானே நல்லது, நண்பர்களே? அதற்கு ஒரு இலகுவான வழி கூட இருக்கிறது!

இஞ்சி சாப்பிட்டால் புற்றுநோய் வருவதைத் தவிர்க்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்! இஞ்சியில் காணப்படும் மஞ்சள் (Turmeric) எனப்படும் மூலிகை, புற்றுநோய் ஏற்படுவதைத் தடுத்து நிறுத்த உதவுகிறது என்று கூறப்படுகிறது. ஏன், புற்றுநோய் இருப்பவர்களின் டியூமர் கட்டியின் (tumor) அளவைக் கூட இஞ்சி சாப்பிட்டுச் சிறிதாக்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறியுள்ளார்கள்.

உதாரணத்திற்கு இந்த ஆராய்ச்சி சம்மந்தப்பட்ட ஆய்வுக்கூடத்தில் முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய் (Prostate Cancer) உள்ள எலிகளுக்கு இஞ்சி கொடுத்து சிகிச்சை செய்த போது, அதனது டியூமர் கட்டிகளின் அளவு 56 சதவீதத்திற்குக் குறைந்து இருக்கின்றது என்பதை அவதானித்துள்ளார்கள். தொடர்ந்து பல ஆராய்ச்சிகளின் அடிப்படையில் இஞ்சி மேலும் 101 விதமான நோய்களைக் குணப்படுத்தவும், அந்த நோய்கள் வராமல் இருக்கவும் மிகவும் உதவுகிறது என்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

நண்பர்களே இதில் ஒரு விஷயத்தை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: இஞ்சி சாப்பிட்டால் புற்றுநோய் வரவே வராது என்றும், புற்றுநோயை இஞ்சி சாப்பிட்டு நிச்சயமாகக் குணப்படுத்தலாம் என்றும் கூறப்படவில்லை! புற்றுநோய் வருவதன் வாய்ப்பைக் குறைக்கலாம் என்று மட்டுமே தான் சொல்லப்படுகிறது.

நாம் சாதாரணமாக நமது உணவில் சேர்த்துக்கொள்ளும் இஞ்சியில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறது என்று எதிர்பார்த்து இருப்பீர்களா? இதைப் பற்றிய உங்கள் கருத்தை மட்டும் இல்லை, எனது சிறு கட்டுரை பற்றிய அபிப்பிராயத்தையும் எனக்குக் கண்டிப்பாக அறியத் தாருங்கள்!
அது வரை தொடர்ந்தும் உங்கள் அன்பையும், ஆதரவையும் எதிர்பார்க்கும்,
உங்கள்
SciNirosh (Niroshan Thillainathan)
---------------------------------------------
இதைப் போல் வேறு அறிவியல் கேள்விகளுக்குப் பதில் தெரிய வேண்டும் என்றால் எனது YouTube Channelஐ Subscribe செய்யுங்கள்:https://www.youtube.com/c/SciNirosh?sub_confirmation=1

#Credit : https://www.facebook.com/SciNirosh/photos/a.1651870578379712.1073741828.1593032197596884/1798105777089524/?type=3&theater

No comments:

Post a Comment